ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 31 அக்டோபர் 2020 (13:21 IST)

அவர் நல்ல மனுசன்; அரசியலுக்கு வரலைன்னா விட்டுடுங்க! – ராஜேந்திர பாலாஜி டூ ரஜினி!

நடிகர் ரஜினி உடல்நிலை குறைவால் கட்சி தொடங்குவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவரது முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது உடல்நலம் காரணமாக அவர் கட்சி பணிகளை தாமதப்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவான அறிக்கை விரைவில் வரும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ள நிலையில், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள், தொண்டர்கள் போஸ்டர் அடிப்பதும், ரஜினி வீட்டின் முன்பு கூடுவதுமாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ரஜினி உடல்நலம் குறித்து பேசியுள்ள திருமாவளவன், சீமான் ஆகியோர் அவர் அரசியலுக்கு வருவதை விட அவரது ஆரோக்யமாக இருப்பதே முக்கியம் என கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “ரஜினி கடந்த 40 ஆண்டுகளாக மக்களோடு கலந்து இருப்பவர். அவர் அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். மக்களும் ஏற்றுக்கொள்வார்கள்” என கூறியுள்ளார்.