1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Seeman Talk about Rajni political entry

நீங்க வந்து ஒன்னும் மாறாது; பேசாம ரெஸ்ட் எடுங்க! – ரஜினிக்கு சீமான் அட்வைஸ்

Tamilnadu
ரஜினியின் அரசியல் நுழைவு உடல்நிலை காரணமாக ஒத்தி போவதாக செய்திகள் வெளியான நிலையில் இதுகுறித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ரஜினி உடல்நலம் சார்ந்த பிரச்சினை காரணமாகவே அரசியல் கட்சி தொடங்காமல் இருக்கிறார் என வாட்ஸ் அப் தகவல்கள் வெளியான நிலையில், அதை தான் எழுதவில்லை என மறுத்த ரஜினி, அதில் உள்ள உடல்நிலை தொடர்பான தகவல்கள் உண்மை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினி ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வந்தே ஆக வேண்டும் என போஸ்டர் ஒட்டியும், ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர். இந்நிலையில் ரஜினியின் உடல்நிலை குறித்தான தகவலுக்கு பிறகு பேசியுள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “ரஜினி, கமலின் அரசியல் நுழைவுக்கு முன்னர் இருந்தே நான் அரசியலில் உள்ளேன். இப்போது ரஜினியை அரசியலில் இழுத்து விடுபவர்களே நாளை அவரை இழிவாக பேசுவார்கள். எனவே நடிகர் ரஜினிகாந்துக்கு ஓய்வு தேவை என்பதால் அரசியலுக்கு வராமல் இருப்பதே நல்லது. அவர் வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படாது” என கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
15 வயதில் முதல் திருமணம்; 17 வயதில் இரண்டாவது திருமணம்! – இளம்பெண்ணின் கணவர்கள் கைது!