துரோகங்களுடன் திவாகரன் கூட்டு சேர்ந்துள்ளார். டிடிவி தினகரன்

Last Modified ஞாயிறு, 20 மே 2018 (10:46 IST)
கடந்த சில நாட்களாகவே சசிகலா குடும்பத்தை சேர்ந்த தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோர் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் உச்சகட்டமாக திவாகரன், சசிகலாவின் புகைப்படத்தையோ பெயரையோ பயன்படுத்த கூடாது என வழக்கறிஞர் நோட்டீசும் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் ஒருவருக்கொருவர் தாக்கி பத்திரிகையாளர்களிடம் பேசி வரும் நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவரும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் கூறியபோது, 'துரோகங்களுடன் திவாகரன் கூட்டு சேர்ந்து விட்டதாக குற்றச்சாட்டினார். மேலும் திவாகரனுக்கும் தனக்கும் எந்தவித சொத்து தகராறும் இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும் கர்நாடக மாநில நிலவரம் குறித்து தினகரன் கூறுகையில், 'கர்நாடகாவில் உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளதாகவும், மக்களிடையே பிரிவினைவாதத்தை ஏற்படுத்துபவர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.
மேலும் 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் விரைவில் நல்ல தீர்ப்பு வரும் என்றும் அதிமுகவின் பொதுச்செயலாளருக்கு தான் அனைத்து அதிகாரமும் உள்ளதாகவும், வழக்கில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம் என்றும் அவர் கூறினார்


இதில் மேலும் படிக்கவும் :