1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Black Thursday for Indian Markets: Sensex Plunges 2000 Points as Global Tensions and Oil Prices Soar

12 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்.. பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் கோவிந்தா கோவிந்தா..!

இந்தியப் பங்குச்சந்தை வீழ்ச்சி
கடந்த மூன்று நாட்களாக ஏற்றத்துடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தை, இன்று காலை வர்த்தக தொடக்கத்திலேயே பெரும் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 1,953 புள்ளிகளும், நிஃப்டி 453 புள்ளிகளும் சரிவுடன் தொடங்கின. 
 
வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 2,000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்த நிலையில், நிஃப்டி 800 புள்ளிகள் வரை சரிந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
 
மத்திய கிழக்கில் ஈரான் நடத்திய எரிசக்தி தாக்குதல்களால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 110 டாலரை தாண்டியது இந்த சரிவுக்கு முக்கிய காரணமாகும். மேலும், எச்டிஎப்சி வங்கித் தலைவர் அதிரடியாக பதவி விலகியதால் அந்த வங்கியின் பங்குகள் பலத்த சரிவைச் சந்தித்தன. 
 
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாததால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய சந்தையிலிருந்து முதலீடுகளை திரும்பப் பெற தொடங்கியுள்ளனர். கிப்ட் நிஃப்டியும் சரிவை காட்டிய நிலையில், இந்திய சந்தை இன்று ரத்தக் களறியாக காட்சியளித்தது.

Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
சார் ஒரு செல்பி ப்ளீஸ்!.. சிபிஐ ஆபிசிலும் மாஸ் காட்டிய விஜய்!.. டெல்லியில் சம்பவம்!...