திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 22 ஜூலை 2019 (12:49 IST)

”அத்திவரதரை குளத்தில் மீண்டும் வைக்ககூடாது”.. ஜீயர் எச்சரிக்கை

அத்திவரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்ககூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள அத்திவரதர், கடந்த ஜுலை 1 ஆம் தேதியிலிருந்து பக்தர்களுக்கு காட்சித் தந்து வருகிறார். அத்திவரதரை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் வந்து போகின்றனர். மேலும் ஆகஸ்டு 17 வரை பக்தர்களுக்கு காட்சித் தரவுள்ள அத்திவரதர், அதன்பிறகு வழக்கம்போல் குளத்துக்குள் தஞ்சம் அடைகிறார். 40 வருடங்களுக்கு ஒரு முறை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு இவ்வாறு காட்சித் தந்து வருகிறார் அத்திவரதர். இந்நிலையில் அத்திவரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்ககூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசியுள்ளார். இது குறித்து ஜீயர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த காலங்களில் திருட்டு பயம் காரணமாக அத்திவரதரை பூமிக்குள் வைத்தனர். ஆனால் அதற்கான தேவை தற்போது இல்லை என்பதால் அத்திவரதரை பூமிக்குள் வைக்க அவசியம் இல்லை என்று அனைத்து மடாதிபதிகளும் முதல்வரை சந்தித்து கோரிக்கை வைக்கவுள்ளோம் என கூறியுள்ளார். இதற்கு முன் ஆண்டாளை பற்றி தரைக்குறைவாக பேசியதாக கவிஞர் வைரமுத்துவை ஆண்டாள் கோவிலில் வந்து மன்னிப்பு கேட்கும்படி கூறி சர்சையை கிளப்பிய ராமானுஜ ஜீயர், தற்போது அத்திவரதரை குளத்திற்குள் மறுபடியும் வைக்ககூடாது என கூறியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.