இஸ்லாமியர்களுக்கு ஒன்னுனா வருவேன்னு சொன்னீங்களே….. டிவிட்டரில் டிரெண்டாகும் #வீதிக்குவாங்கரஜினி ஹேஷ்டேக்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய இஸ்லாமியர்களுக்கு போலீஸார் தடியடி நடத்திய நிலையில் “#வீதிக்குவாங்கரஜினி” என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நேற்று இரவு சென்னையில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், போலீஸார் போராட்டக்காரர்களை கலைக்க தடியடி நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்கும் பதியப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து ரஜினிகாந்த் பேசியபோது “இஸ்லாமியர்களுக்கு ஒன்னுனா நான் வந்து நிப்பேன்” என கூறினார்.
இதனை குறிப்பிட்டு பலரும் #வீதிக்குவாங்கரஜினி” போன்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்தி ”இஸ்லாமிர்களுக்கு ஒன்னுனா வருவேன்னு சொன்னீங்களே, எங்கே போயிட்டீங்க”? என்பது போன்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தற்போது டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் உள்ளது.