சிஏஏ போராட்டம்: ரஜினியை விமர்சனம் செய்த திமுக எம்பிக்கு ரசிகர்கள் பதிலடி

ரஜினியை விமர்சனம் செய்த திமுக எம்பிக்கு ரசிகர்கள் பதிலடி
Last Modified சனி, 15 பிப்ரவரி 2020 (11:01 IST)
ரஜினியை விமர்சனம் செய்த திமுக எம்பிக்கு ரசிகர்கள் பதிலடி
சமீபத்தில் ஊடகங்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சிஏஏ மற்றும் என்.ஆர்.சி சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்ததோடு இந்த சட்டத்தால் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என்று கூறினார் .அது மட்டுமின்றி இந்திய முஸ்லிம்களுக்கு ஏதாவது ஆபத்து என்றால் முதல் ஆளாக நான் குரல் கொடுப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென வண்ணாரப்பேட்டையில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக நடந்த போராட்டத்தில் இஸ்லாமியர்கள் பலர் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. இதுகுறித்து திமுக எம்பி செந்தில்குமார் அவர்கள் தனது டுவிட்டர் தளத்தில் கூறியதாவது: #இஸ்லாமியர்களுக்கு ஒரு ஆபத்து என்றால் முதல் ஆள் ஆக நான் நிற்பேன்- சொன்னது நீ தானா, சொல் சொல். எங்க ரஜினிகாந்தை ஆள காணோம். கேட்டை திறந்த உங்க வாழ்க்கையை ஆரம்பித்த தமிழகம், அதே கேட்டை முடித்து வைக்கவும் தயங்காது என்று கூறியுள்ளார்..
செந்தில்குமார் எம்பியின் இந்த டுவிட்டுக்கு பதிலடி தரும் வகையில் ரஜினி ரசிகர்கள் டுவிட்டரில் கூறியதாவது: பாராளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஓட்டு போடவில்லை, ஆனால் இணையத்தில் கபட நாடகம் எதற்கு? திமுக தூண்டுதலால் இஸ்லாமியர்களுக்கு ஆபத்து என்றால் முதல் ஆள் ஆக நான் நிற்பேன் என்று ரஜினிகாந்த் சொல்லவில்லை. திமுகவின் ஒரே கொள்கை இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாக போகட்டும் என்று கூறியுள்ளனர். இந்த இரண்டு டுவிட்டுக்களும் வைரலாகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :