”நேற்றைய இரவு ஒரு கறுப்பு இரவு”.. ஸ்டாலின் கண்டனம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை போலீஸார் தாக்குதல் நடத்திய நிலையில், “பிப்ரவரி 14 இரவை, கறுப்பு இரவாக்கிய காவல்துறைக்கு கண்டனம்” என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று இரவு குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து செல்லாததால் தடியடி நடத்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் ஒரு முதியவர் உயிரிழந்தார் என செய்திகள் வெளிவந்தன. ஆனால் முதியவர் உயிரிழந்ததற்கும் சிஏஏ போராட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் ”வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி பிப்ரவரி 14 இரவை கறுப்பு இரவாக்கிய காவல்துறைக்கு கண்டனம்” என தெரிவித்துள்ளார்.