அனைத்து கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்; டி.என்.பி.எஸ்.சி.-ன் அதிரடி சீர்த்திருத்தங்கள்

Arun Prasath| Last Modified சனி, 15 பிப்ரவரி 2020 (10:50 IST)
குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் அதிரடி சீர்த்திருத்தங்களை கொண்டுவந்துள்ளது டி.என்.பி.எஸ்.சி.

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் முறைகேடு நடந்ததை தொடர்ந்து பல்ரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளில் சீர்த்திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. அதன் படி, குரூப் 2, குரூப் 4 தேர்வுகள் முதல் நிலை, முதன்மைத் தேர்வு என இரு நிலை தேர்வுகளாக மாற்றப்பட்டுள்ளது.

அதே போல் அனைத்து கேள்விகளுக்கும் தேர்வர்கள் விடையளிக்க வேண்டும். தேர்வு எழுதுபவர்கள் காலை 9 மணிக்கே தேர்வுக் கூடங்களுக்கு வரவேண்டும் எனவும் அறிவித்துள்ளது. மேலும் தேர்வர்களின் கையெழுத்து வாங்குவதற்கு பதில் கை ரேகை பதியப்படும் எனவும் அறிவித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :