1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 8 பிப்ரவரி 2020 (13:47 IST)

மோடிக்கு தெரிஞ்சது இரண்டே விஷயம்தான்: எம்.பி.கனிமொழி விமர்சனம்!

நாட்டில் வேலையில்லாத திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி போன்றவை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் மோடி தொடர்ந்து இரண்டு விஷயங்கள் பற்றி மட்டுமே பேசி வருவதாக திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கத்தின் கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எம்.பி கனிமொழி, விவசாயிகள் தற்கொலை, வேலையில்லா திண்டாட்டம் போன்றவை அதிகரித்திருக்கும் நிலையில் திசை திருப்பும் விதமாக குடியுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பேசியுள்ளார்.

மேலும் டெல்லி ஜாமியா பல்கலைகழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து குற்றம் சாட்டிய அவர், பிரதமர் மோடி பாகிஸ்தான், நேரு இந்த இரண்டை தவிர வேறு எதையும் பேசுவதில்லை என்றும் கூறியுள்ளார்.