செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : சனி, 25 ஜனவரி 2020 (12:27 IST)

பாகிஸ்தான் இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும்; சிவசேனா

பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என சிவசேனா கூறியுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில் பாஜகவினர் குடியுரிமை திருத்த சட்டம் குறித்தான புரிதலை மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில் சிவசேனா தனது நாளேடான சாம்னா பத்திரிக்கையில், ”பாகிஸ்தான், வங்கதேசத்திலிருந்து வந்த இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு அகற்ற வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. சிவசேனா எப்போதும் இந்துத்துவாவுக்காகவே போராடி வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தில் பல ஓட்டைகள் உள்ளன. அவை சரிசெய்யப்பட வேண்டும்” என கூறியுள்ளது.