திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (15:19 IST)

ரஜினி-அதிமுக கூட்டணியை உறுதி செய்த அமித்ஷா

அமித்ஷாவின் சென்னை வருகை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்முறையாக அதிமுகவின் தலைவர்களான ஈபிஎஸ், மற்றும் ஓபிஎஸ் கலந்து கொள்ளும் மேடையில் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா? அல்லது அதிமுகவின் தலைமை ஏற்பாரா? என்று ஒரு தகவல் அரசியல் உலகில் பரவி வரும் நிலையில் இன்று அமித்ஷா முன்னிலையில் ரஜினிகாந்த், ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகிய மூவரும் ஒரே மேடையில் அமர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
மக்களவை தேர்தல் போல் வரும் சட்டமன்ற தேர்தலில் கோட்டை விடக்கூடாது என்று கண்டிப்புடன் உள்ள அமித்ஷா, அதிமுக+ரஜினி+பாஜக கூட்டணிக்கு முயற்சித்து வருவதாகவும், அடுத்தகட்டமாக மு.க.அழகிரி தலைமையில் ஒரு பெரிய திமுக கூட்டத்தையும் இந்த கூட்டணியில் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த விழா துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் புத்தகவிழா என்றாலும் இதில் அமித்ஷா கலந்து கொள்ள முக்கிய காரணம் தமிழக அரசியல்தான் என்றும், இனி அடிக்கடி அமித்ஷாவை சென்னை பக்கம் பார்க்கலாம் என்றும்  தமிழக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. மொத்ததில் வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு கடும் சவால் கொடுக்க அமித்ஷா முடிவு செய்துவிட்டார் என்றே தெரிகிறது