புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (11:53 IST)

தமிழர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்: அமித்ஷா

சென்னை கலைவாணர் அரங்கில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் அமித்ஷா கலந்து கொண்டார். இந்த விழாவில் அவர் பேசியதாவது:
 
வெங்கய்ய நாயுடுவிடம் இருந்து நான் ஏராளமாக கற்றுக்கொண்டுள்ளேன். அமைச்சராகவோ, பாஜக தலைவராகவோ இங்கு நான் வரவில்லை. மக்கள் பணியில் முன்னுதாரணமாக உள்ள வெங்கய்ய நாயுடுவின் மாணவராக வந்துள்ளேன் 
 
இந்த விழாவில் தமிழில் பேச நினைத்தேன், ஆனால் என்னால் பேச முடியவில்லை. தமிழில் பேச முடியாததற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். விரைவில் தமிழ் மொழியை கற்றுக்கொண்டு தமிழில் பேசுவேன். மேலும் இந்த விழாவில் ரஜினி பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது
 
இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்