1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (11:40 IST)

அமித்ஷாவும் மோடியும் கிருஷ்ணன் - அர்ஜீனன் போன்றவர்கள்: ரஜினி புகழாரம்

காஷ்மீர் விவகாரத்தை அமித்ஷா கையாண்ட விதம் குறித்து கமல்ஹாசன் உள்பட பல கோலிவுட் திரையுலகினர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் எதிர்பார்த்தது போலவே அமித்ஷாவின் காஷ்மீர் குறித்த அதிரடி நடவடிக்கைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
 
இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழாவில் அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:
 
'ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை அமித்ஷா திறம்பட கையாண்டது பாராட்டுக்குறியது ஆகும். மேலும் நாடாளுமன்றத்தில் அமித்ஷா அவர்கள் ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது. அமித்ஷாவும் மோடியும் கிருஷ்ணன் - அர்ஜீனன் போன்றவர்கள்' என்று கூறினார்.
 
மேலும் வெங்கையா நாயுடு மிகச்சிறந்த ஆன்மீகவாதி என்றும், அவர் தப்பித்தவறி அரசியல்வாதி ஆகிவிட்டார் என்றும் ரஜினிகாந்த் அவருக்கு புகழாராம் சூட்டினார்.