திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 11 ஆகஸ்ட் 2019 (11:05 IST)

சென்னை வந்த அமித்ஷா: இரவு நேரத்தில் சென்று சந்தித்த முதல்வர்

சென்னைக்கு வந்திருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனியாக சந்தித்து பேசினார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது இரண்டு வருடகால பணி அனுபவங்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னைக்கு வந்தார் அமித்ஷா.

அவரை முதல்வர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், எச்.ராஜா ஆகியோர் வரவேற்றனர். அமித்ஷா ஆளுனர் மாளிகையில் தங்கியுள்ளார். அவரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரவில் தனியாக சென்று சந்தித்தார்.

இருவருக்குமிடையே 20 நிமிடங்கள் வரை உரையாடல் தொடர்ந்தது. அதில் என்ன பேசி கொண்டார்கள் என்ற அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளியாகவில்லை. ஆனால் அதிமுக கட்சி உட்பூசல் விவகாரங்கள் குறித்து முதல்வர் பேசியிருக்கலாம் என எதிர்தரப்பினர் பேசிக் கொள்கின்றனர்.

ஆனால் தமிழகத்திற்கு மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை உடனடியாக பெறுவது, அண்டை மாநிலங்களுடனான சமரச போக்கு ஆகியவற்றை குறித்து அவர் பேசியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.