தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குள்ளாக தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவகாற்றால் வட மாநிலங்களில் பரவலான மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்திலும் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி பகுதிகளிலும் பரவலான மழை...