வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 அக்டோபர் 2019 (10:53 IST)

வங்ககடலும், அரபிக்கடலும் சேர்ந்து காட்டும் ஆட்டம்: வெளுக்க போகுது மழை!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 
 
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனுடன் தற்போது வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகுவதால் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மழைக்கு வெப்ப சலனமும் ஒரு காரணமாக இருந்தாலும், அரபிக்கடலில் 55 கிமீ வேகத்தில் காற்றுவீசும் என்பதால் மீனவர்கள் 2 நாட்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.