வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. வியாதிகள்
Written By Sasikala

டெங்கு காய்ச்சல் எப்படி எவ்வாறு பரவுகிறது தெரியுமா...?

டெங்கு காய்ச்சல் என்பது, கொசுக்கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் நோய். இது சாதரணமாக திடீரென பாதிப்பை ஏற்படுத்தி அதிக காய்ச்சல்,  தலைவலி, உடம்பு வலி, கடுமையான தசை வலி, சோர்ந்து போதல், மூட்டு வலி, கண்ணின் பின்புறம் வலி மற்றும் தோலில் ஒரு வகை கலர்  மாற்றம் ஏற்படுத்தும்.
இதில் குறிப்பாக ஜூரம், தோல் நிற மாற்றம், தலைவலி தான் எல்லா டெங்கு நோயாளிகளுக்கும் இருக்கும். மூன்று நோய் அறிகுறி. இதுபோக  இரத்த கசிவுகளை ஏற்படுத்தலாம். இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை அதிகம் கடுமையாக பாதிக்கும். இந்த நோய், நான்கு வகையான வைரஸ்களால் உண்டாக்கப்படுவதால், ஒருவருக்கே பலமுறை டெங்கு வரலாம். ஆனால் டெங்கு வரஸ் ஒரு வகையால்  பாதிக்கப்பட்டால் அந்த வகை வைரஸுக்கு மட்டும் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு தன்மை உருவாகி விடும். மற்ற வகை வைரஸுக்கு  எதிராக, நோய் எதிர்ப்பு தன்மை வராது.
 
எப்படி பரவுகிறது?
 
ஏடிஸ் ஈஜிப்டி என்னும் உடலில் கோடுள்ள, பகலில் கடிக்கும் கொசு மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இந்த கொசு நோயால் பாதிக்கப்பட்ட  ஒரு நபரை கடித்து தன்னுள் வைரஸை எடுத்து, மற்றவர்களுக்கு பரப்புகிறது. இந்த கொசு அநேகமாக வீட்டினுள் பதுங்கி இருக்கும். இந்த  கொசு அநேகமாக மழை காலங்களில் இனப்பெருக்கம் செய்யும். 
 
மழை இல்லாத காலங்களில் தண்ணீர் தேங்கும் பூச்சாடிகள், பிளாஸ்டிக் பைகள், கேன்கள், தேங்காய் செரட்டைகள், டையர்கள் போன்றவற்றில் இனபெருக்கம் செய்கிறது. இந்த வைரஸ் கொசுக்கடி மூலம் இல்லாமல், நேரிடையாக நோயாளிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாது.  நோயாளிடம் இருந்து, கொசுக்குள் போய் பின்னர் தான் அடுத்த மனிதர்க்கு பரவும். நோயாளியை தொடுதல், அருகில் இருத்தம் மூலம் பரவாது.