விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இயந்திர கோளாறு..

Arun Prasath| Last Modified திங்கள், 21 அக்டோபர் 2019 (10:31 IST)
விக்கிரவாண்டி தொகுதியில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு ஏற்பட்டது.

விக்கிரவாண்டி நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் தற்போது சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள 233 ஆவது எண் கொண்ட வாக்குச்சாவடியில் இயந்திர கோளாறு ஏற்பட்டது.

இதனால் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனை சீரமைக்க அலுவலர்கள் முயற்சி செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நாங்குநேரி தொகுதியில் உள்ள தெய்வநாயகிபேரியில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியபோது, இயந்திர கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 45 நிமிடங்கள் தாமதமாக தொடங்கிய தகவலும் குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :