1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain warning to tamil nadu next three days

தமிழ்நாட்டில் 3 நாட்கள் அதி கனமழை பெய்யும்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Chennai Rain
தமிழ்நாட்டில் ஜூன் 23, 24, 25 ஆகிய 3 நாட்கள் அதி கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் நாளை கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் 23, 24, 25 ஆகிய தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு என்றும், இன்றைய தினம் கேரளா மற்றும் கடலோர கர்நாடகாவில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும் வரும் 23,24,25 ஆகிய தேதியில் அதி கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்டதை அடுத்து கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதை அடுத்து அனைத்து மாநில அரசுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
சர்வதேச யோகா தினம்: காலையிலேயே யோகா செய்த பிரதமர் மோடி!