1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 10 ஜூன் 2024 (15:23 IST)

இன்னும் சில மணி நேரத்தில் கொட்டப்போகுது கனமழை.. 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

Chennai Rain
இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஒன்பது மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகம் புதுவையில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் ஜூன் 15 ஆம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva