1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain warning to some districts tomorrow

நாளை மீண்டும் கனமழை; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கனமழை
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வந்தது என்பதும் இதனால் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் கனமழை மற்றும் வெள்ளத்தில் இருந்து படிப்படியாக பொதுமக்கள் மீண்டு வரும் நிலையில் நாளை மீண்டும் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கடலூர் ராமநாதபுரம் புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
கல்லூரி மாணவர் மணிகண்டனின் உடலை மறுகூராய்வு செய்ய வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு