ஜாவத் புயல் வலிவிழந்தாலும் கொட்டி தீர்த்த கனமழை!
வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது என்பதும் அந்த புயலுக்கு ஜாவத் என்று பெயர் வைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜாவத் புயல் வலுவிழந்து மீண்டும் காற்று மண்டலமாக மாறியது என்பதும் அந்த காற்று மண்டலம் ஒரிசா மற்றும் ஆந்திர மாநிலம் இடையே கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் வலுவிழந்த ஜாவத் புயல் ஒடிசா கடல் பகுதியில் மையம் கொண்டிருப்பதாகவும் நேற்று ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் 100 மில்லி மீட்டருக்கு மேல் மழையை ஏற்படுத்தியது என்றும் இதனால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகள் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது
அதுமட்டுமின்றி 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோ மீட்டர் அளவுக்கு வீசியதாகவும் கூறப்படுகிறது. மேலும் நேற்று நள்ளிரவில் ஜாவத் புயல் வடக்கு நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது