1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 5 டிசம்பர் 2021 (08:03 IST)

ஜாவித் புயலின் ஆபத்து நீங்கியதா? வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய அறிவிப்பு!

கடந்த சில நாட்களாக ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய  மாநிலங்களை மிரட்டிக் கொண்டிருந்த ஜாவித் புயலின் ஆபத்து நீங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பது பொதுமக்களுக்கு பெரும் ஆறுதலை அளித்து உள்ளது
 
வங்கக்கடலில் தோன்றியுள்ள ஜாவித் புயல் இன்று ஆந்திரா மற்றும் ஒரிசா இடையே கரையை கடக்கும் என்றும் அதனால் மிகக் கனத்த மழை பெய்து பெரும் சேதத்தை உண்டாக்கும் என்றும் கணிக்கப்பட்டு இருந்தது.
 
ஆனால் தற்போது வந்துள்ள தகவலின்படி ஜாவித் புயல் மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து விட்டதாகவும் இன்று மதியம் ஆந்திரா மற்றும் ஒரிசா இடையே கரையை கடந்தாலும் பெரிய ஆபத்து எதுவும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காளம் மற்றும் தமிழகம் உள்பட ஒரு சில பகுதிகளில் கனமழை இருந்தாலும் புயலுக்கான பாதிப்பு இருக்காது என்று அறிவிக்கப்பட்டிருப்பது பொதுமக்களுக்கு பெரும் ஆறுதல் அளிக்கக் கூடிய செய்தியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.