தொடர்புடைய செய்திகள்
- கனமழை எதிரொலி.. எந்தெந்த பகுதிகளில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..?
- அடுத்த 24 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!
- கேரளாவை மிரட்டும் மழை.. ரெட், ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!
- தமிழகம் போலவே இந்தியாவிற்கும் திராவிட மாடல் ஆட்சி தேவை: முதல்வர் ஸ்டாலின்..!
- தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம்
அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை மையம்
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவ மழை தீவிரமாக பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள சில பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய பத்து மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்று அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் மாலை மற்றும் இரவு நேரத்தில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
