1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Heavy rain for four districts next 24 hours

அடுத்த 24 மணிநேரத்தில் 4 மாவட்டங்களில் கனமழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

கனமழை
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் கோடை காலம் முடிவடைந்து தற்போது சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பெய்து உள்ளதை அடுத்து அங்கு பள்ளிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் தேனி, திண்டுக்கல், திருச்சி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்து வரும் நிலையில் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
கேரளாவை மிரட்டும் மழை.. ரெட், ஆரஞ்ச் மற்றும் மஞ்சள் எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்..!