1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Indian meteorological center says about rain

தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை: இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை முதல் கன மழை மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று முதல் அதாவது ஜூலை 6 முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை மற்றும் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே கேரளா மற்றும் கர்நாடகாவின் ஒரு சில பகுதிகளில் கன மழை வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை என்பதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்