1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (16:44 IST)

குளிர்ந்தது சென்னை.. திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!

Rain
சென்னையில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திரம் போல் வெயில் கொளுத்திக் கொண்டிருந்த நிலையில் இன்று திடீரென சென்னையில் பல இடங்களில் மழை பெய்து வருவது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
திடீர் மழை காரணமாக சென்னையின் பல பகுதிகளில் குளிர்ச்சியான தட்பவெப்பம் நிலவுகிறது என்பதும்  குறிப்பிடத்தக்கது. சென்னை ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம் போன்ற பகுதிகள் பலத்த மழை பெய்து வருகிறது.  
 
அதேபோல் சென்னை எழும்பூர், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.  சென்னை மழை காரணமாக பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில நாட்களாக கடும் வெயில் காரணமாக புழுக்கத்தில் இருந்த சென்னை மக்களுக்கு இந்த மழை பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் சென்னை எழும்பூர் அண்ணாசாலை தேனாம்பேட்டை புரசைவாக்கம் திருவல்லிக்கேணி பகுதிகளில்  மழை பெய்ததன் காரணமாக வாகனங்கள் மிகவும் மெதுவாக ஊர்ந்து கொண்டு சென்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva