வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (13:16 IST)

சென்னையில் சிறுமியை முட்டி தூக்கி வீசிய பசுமாடு.. பரவலாகும் வீடியோ

cow hit a child
சென்னையில் சிறுமியை  பசுமாடு முட்டி தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக வீடுகளில் ஆடு, மாடு, பூனைகள் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகிறது. ஆனால், இவற்றை பொது இடங்களில் விடுவதால் ஒரு சில நேரங்களில்  மக்கள், வாகன ஓட்டிகள், குழந்தைகள் முதற்கொண்டு பலரும் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நிலையில், சென்னை அரும்பாக்கம் சி.எம்.டி.ஏ. பகுதியில் சாலையில் கட்டுப்பாடின்றி திரிந்த பசுமாடு, அந்த வழியே  சென்ற பள்ளி சிறுமியை   முட்டித் தூக்கி வீசியது.

அந்தக் பசு மாட்டிடம் இருந்து சிறுமியை  மீட்கப் பலரும் போராடிய நிலையில் அந்த மாடு ஆக்ரோசமாக சிறுமியை முட்டியது.

அதன்பின்னர்,அந்த மாட்டை விரட்டிய சிறுமியை மீட்டனர்.  படுகாயமடைந்த அந்தக் குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக  மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.