திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 10 ஆகஸ்ட் 2023 (07:42 IST)

ஆகஸ்ட் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை: 2 மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு..!

Holiday
கேரளாவில் ஓணம் பண்டிகை மிகவும் சிறப்பாக இந்த மாதம் கொண்டாட இருக்கும் நிலையில் ஆகஸ்ட் 29ஆம் தேதி சென்னை மற்றும் கோவை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர். 
 
சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ஓணம் பண்டிகையை முன்னிட்டு 29.08.2023, செவ்வாய்க்கிழமை சென்னை மாவட்டத்துக்கு அரசு ஆணைப்படி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. மேற்படி உள்ளூர் விடுமுறைக்குப் பதில் 02.09.2023 சனிக்கிழமை அன்று சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
 
இதே போல் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை என அறிவித்துள்ளார்.
 
Edited by Siva