தொடர்புடைய செய்திகள்
- சென்னை திரும்பிய அஜித்… அடுத்த கட்டத்தில் விடாமுயற்சி பணிகள்!
- கணவன் சொத்துகளில் மனைவிக்கு சமபங்கு: சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு
- தங்கம், வெள்ளி விலை மீண்டும் உயர்வு.. இன்றைய சென்னை நிலவரம்..!
- இன்றும் நாளையும் அதிகனமழை: ஆந்திரா, தெலங்கானாவிற்கு சிவப்பு எச்சரிக்கை..!
- சென்னை- கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் சேவை திடீர் நிறுத்தம்: என்ன காரணம்?
இன்னும் 3 மணி நேரத்தில் கொட்டப்போகுது மழை.. எந்தெந்த மாவட்டத்தில்..?
இன்னும் மூன்று மணி நேரத்தில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சற்று முன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என்றும் மேற்கண்ட நான்கு மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது நிலையில் நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அறிவித்துள்ளது.
Edited by Siva
