ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

தமிழகம் முழுவதும் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் சென்னை உள்பட பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்று காலை முதல் மிதமான மழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து உள்ளதை அடுத்து பூமி குளிர்ந்து உள்ளது என்பதும் இதனால் இதமான தட்பவெப்பம் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் சென்னை உள்பட பல பகுதிகளில் குடிநீர் ஆதாரங்களான நீர்நிலைகளும் நிரம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இன்றும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது