1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 14 ஜூலை 2021 (16:00 IST)

இன்னும் ஒரு மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்!

இன்னும் ஒரு மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருவது குறித்த செய்தியை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் இன்னும் ஒரு மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
சேலம் ஈரோடு நாமக்கல் தர்மபுரி திருப்பத்தூர் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் இன்னும் ஒரு மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே இந்த ஆறு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது