தொடர்புடைய செய்திகள்
- இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சென்னையில் இன்றைய விலை என்ன?
- இன்று முதல் மளிகை பொருட்கள் வாங்க மொபைல் எண்கள்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
- தமிழகத்தில் இன்று 29 ஆயிரத்திற்கும் குறைந்த கொரோனா பாதிப்பு!
- மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்: விசாரணைக்கு ஆஜராக உத்தரவு!
- தடகள வீராங்கனைக்கு பாலியல் தொல்லை; பயிற்சியாளர் கைது! – அதிகரிக்கும் நடவடிக்கைகள்!
சென்னையில் நள்ளிரவில் திடீர் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மற்றும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது
இந்த நிலையில் சென்னை ஆதம்பாக்கம், தியாகராய நகர், தேனாம்பேட்டை போன்ற பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீரென காற்றுடன் சிறிது நேரம் கனமழை பெய்து. மேலும் நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், கீழ்கட்டளை, மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ததல், ஒருசில பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கியது. நள்ளிரவில் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
சென்னை மட்டுமின்றி நேற்று வேலூர் மாவட்டத்திலும் பலத்த காற்று இடியுடன் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாக குடியாத்தம் பகுதியில் கடும் வெயிலால் அனல் காற்று வீசி வந்தது. இந்த நிலையில் நேற்று பெய்த கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்
அடுத்த கட்டுரையில்
