1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 31 மே 2021 (07:11 IST)

இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சென்னையில் இன்றைய விலை என்ன?

ஐந்து மாநில தேர்தல் முடிவடைந்து அனைத்து மாநிலங்களிலும் புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்திக் கொண்டே வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது பெட்ரோல் லிட்டருக்கு 25 காசுகளும், டீசல் லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து உள்ளது என்பதும் இன்று அதிகாலை முதல் இந்த விலை அமலுக்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து ரூ.95.76 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதே போல் டீசல் விலை லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து ரூ.89.90 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி உயர்ந்து கொண்டே வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை குறைப்பது மட்டுமே ஒரே தீர்வு என பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் திமுக அரசு விரைவில் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது