வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 30 மே 2021 (16:21 IST)

மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்: விசாரணைக்கு ஆஜராக உத்தரவு!

மேலும் ஒரு பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்: விசாரணைக்கு ஆஜராக உத்தரவு!
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் வழக்கில் சிக்கிய நிலையில் அவரைத் தொடர்ந்து மேலும் ஒரு சில பள்ளி ஆசிரியர்களும் சிக்கி வருகின்றனர் 
 
ஏற்கனவே ராஜகோபாலனை அடுத்து சென்னையில் உள்ள அகடமி ஒன்றில் பயிற்சி ஆசிரியராக இருந்த நாகராஜன் என்பவர் வீராங்கனை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் தற்போது சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் என்ற பள்ளியில் மாணவிகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாக புகார் கொடுத்துள்ளனர்
 
இதனை அடுத்து பள்ளி மாணவிகளின் புகாரின் மீது நடவடிக்கை எடுத்துள்ள மாநில குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு ஆணையம் ஆசிரியர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. வரும் 8ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளி ஆசிரியர்கள் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.