ஜூன் மாதத்திற்கு 12 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும்! – மத்திய அரசு தகவல்!
இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அடுத்த மாதத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நடப்பு மே மாதத்தில் 7.94 கோடி தடுப்பூசிகள் மாநில, யூனியன் அரசுகளுக்கு மற்றும் நேரடி கொள்முதல் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டன.
இந்நிலையில் அடுத்த ஜூன் மாதத்தில் மொத்த தடுப்பூசிகள் 12 கோடி கிடைக்கும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதில் மாநில, யூனியன் அரசுகளுக்கு எவ்வளவு கிடைக்கும், நேரடி கொள்முதல் திட்டட்தின் கீழ் எவ்வளவு விநியோகிக்கப்படும் என்ற தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.