வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 23 ஜூலை 2023 (08:38 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழை! – எந்தெந்த மாவட்டங்களில்?

alangatti rain
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தென்மேற்கு பருவமழை காரணமாக அரபிக்கடலோர மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இன்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் மழை வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, நீலகிரி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K