1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain chances in tamilnadu upcoming 3 hours

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை! – வானிலை ஆய்வு மையம்!

Rain Chances
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் இன்றும் மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



தென்மேற்கு பருவமழை காரணமாக அரபிக்கடலோர மாநிலங்களில் தொடர் மழை பெய்து வரும் நிலையில் காற்றழுத்த மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டிலும் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களிலும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் அடுத்த 3 மணி நேரத்திற்குள் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K
அடுத்த கட்டுரையில்
ரயில் நிலைய பிளாட்பாரத்தில் ரயில் மோதி சிறுவன் பலி