1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain Forecast in 18 Districts Due to Tetma Depression

டிட்வா புயல் எதிரொலி: இன்று காலை 18 மாவட்டங்களில் மழை பெய்யும்..

டெட்மா புயல்
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த டிட்வா புயல், தற்போது புதுச்சேரி மற்றும் சென்னைக்கு இடையில் வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கிச் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
இருப்பினும், புயல் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்துவிட்டதால், அதிக கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்றும், மிதமான மற்றும் கனமழை மட்டுமே பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், நீலகிரி, திருவள்ளூர், திருவாரூர், திருப்பூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.
 
மேற்கண்ட பகுதிகளுடன், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஆபரேஷன் சிந்தூர் 2.0க்கு தயாராக இருக்கிறோம்.. எல்லை பாதுகாப்பு படை அதிரடி..!