தொடர்புடைய செய்திகள்
- மத்திய அரசை விரைவில் கவிழ்ப்போம்.. மம்தா பானர்ஜியின் அதிரடி சபதம்!
- திரிணமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கொத்து கொத்தாக ஆதார் அட்டைகள்: தீவிர விசாரணை..!
- 1.69 கோடி சாதி சான்றிதழ்கள் போலியா? ஆய்வு செய்ய அதிரடி உத்தரவு பிறப்பித்த மேற்குவங்க முதல்வர்..!
- சட்டப்பேரவையை கலைத்து ஆளுனர் ஆர்.என்.ரவி உத்தரவு.. பெரும் பரபரப்பு..!
- முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்.. அடம்பிடிக்கும் மம்தா பானர்ஜி..! டிஸ்மிஸ் செய்யப்படுவாரா?
20 எம்.எல்.ஏக்கள் மட்டுமே பங்கேற்பு!. மம்தா பேனர்ஜு கூடாரம் காலியாகிவிட்டதா?..
மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் மம்தா பானர்ஜி. கடந்த மூன்று முறையும் அவர்தான் அங்கு முதலமைச்சராக நீடித்து வந்தார். ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது. மாறாக பாஜக அங்கு ஆட்சியை பிடித்தது.
இதையடுத்துது திரிணமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. 100க்கும் மேற்பட்ட திரிணமுல் வுன்சிலர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அதோடு பாஜக நடத்திய ஒரு கூட்டத்தில் திருணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர்.
ஒருபக்கம் திரிணமுல் காங்கிரஸ் எம்.பிக்கள் இரண்டு பேர் கடுமையாக தாக்கப்பட்டனர். இந்நிலையில்தான், மம்தா பானர்ஜி தனது இல்லத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தை கூட்டினார். திரிணமுல் காங்கிரசுக்கு 80 எம்.எல்.ஏக்கள் இருக்கும் நிலையில் இந்த கூட்டத்தில் 20 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இது மம்தாவுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
ஆனாலும், அவர்களோடு மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இப்படியே போனால் மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் அழிந்துவிடும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். ஒருபக்கம் இதற்கெல்லாம் காரணம் பாஜகதான்.. திரிணமுல் காங்கிரஸ் கட்சியை அழிக்கும் முயற்சியில் பாஜக இறங்கிவிட்டது என்று அவர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள்.
