ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (13:39 IST)

ஆச்சர்யம்... அதிசயம்... ரஜினி ஸ்டைலில் வெதர்மேன் வெதர் ரிபோர்ட்!!

தமிழகத்தில் எதிர்ப்பார்ததை விட நல்ல மழை பெய்யும் என தமிழக வெதர்மேன் தெரிவித்துள்ளார். 
 
ஆம், தமிழகத்தில் இன்று மற்றும் நாளை எதிர்ப்பார்த்ததை விட அதிக மழை பெய்யுமாம். இது குறித்து அவர் குறிப்பிட்டிருப்பதாவது, ஆச்சரியம், ஆச்சரியம் 13 ஆம் தேதி இரவு மற்றும் 14 ஆம் தேதி காலையில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எண்ணியிருந்த நிலையில் தற்போது கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 
 
கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் இருந்து வரும் மேகக் கூட்டங்கள் ஒன்றோடு ஒன்று மோதி, அதனால் 13 ஆம் தேதி இரவு மற்றும் 14 ஆம் தேதி காலை வரை திடீர் மழையை எதிர்பார்க்கலாம்.
 
கடலூர் முதல் சென்னை வரையிலான பகுதிகளில் மழையை எதிர்ப்பார்க்கலாம். குறிப்பாக சென்னைக்கு இந்த நிகழ்வு மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது என தெரிவித்துள்ளார்.