திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (12:19 IST)

ஜெட் வேகத்துல போய்க்கிட்டிருக்கோம்! – அரசின் செயல்பாடுகள் குறித்து செல்லூர் ராஜூ!

எடப்பாடி பழனிசாமி தமிழகத்துக்கு ஏற்ற முதல்வர் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள ஊராட்சி அமைப்புகளுக்கு மட்டும் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் வேகமாய் நடைபெற்று வருகின்றன. தமிழக அரசியல் கட்சிகளும் கூட்டணி பிரிப்பது முதல், களப்பணிகள் வரை அனைத்து பணிகளையும் கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேர்தல் குறித்து பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு ”எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தமிழகத்துக்கு மிகவும் ராசியான முதல்வர். அதனால்தான் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியுள்ளன” என்று கூறியுள்ளார்.