1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain continuous for two days in Tamil nadu

இனியும் தொடரும் மழை: எத்தனை நாட்களுக்கு??

மழை
தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இனியும் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் வடதமிழக கடலோர பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால், தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

முக்கியமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உண்டு எனவும் கூறப்படுகிறது.

மேலும் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, வேலூர் பகுதியில் 150 மி.மீ மற்றும் திருப்பத்தூர் பகுதியில் 100 மி.மீ வரை மழை பெய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அடுத்த கட்டுரையில்
பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்த சத்ருஹன்சின்ஹா: திடீர் பல்டி ஏன்?