அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் கோடைக்காலம் நடந்து வரும் நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை பருவம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. எனினும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
இந்நிலையில் ஏப்ரல் 28ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்று மிதமான அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.