திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (15:24 IST)

கொரோனா கட்டுப்பாடுகள் அமல்..! ஆட்சியர்களுக்கு பறந்த அறிவுறுத்தல் கடிதம்!

Radhakrishnan
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை ஐஐடியில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொடர்ந்து கொரோனா அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதுவரை சென்னை ஐஐடியில் 55 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனால் சென்னை ஐஐடியில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டார். தற்போது ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில், தமிழ்நாட்டில் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.