1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Anandakumar
Last Updated : சனி, 23 ஏப்ரல் 2022 (23:59 IST)

தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மழை

karur
அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் மே 4-ஆம் தேதி தொடங்குகிறது. மே 28ஆம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும். அக்னி வெயில் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும்.
 
கரூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே, கோடை வெயில் உச்சத்தினை அடைந்த நிலையில்,. ஆங்காங்கே கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இந்நிலையில், இன்று மாலை முதல் ஆங்காங்கே கார்மேகம் சூழ்ந்து மழை வரும் நிலையில், இருந்த போது, குளித்தலை, இலாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம், மாயனூர், மணவாசி, புலியூர், காந்திகிராமம் ஆகிய பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான வரை பெய்த்து. கரூர் மாநகரத்திற்குட்பட்ட பகுதிகளான ஜவகர் பஜார் லைட் ஹவுஸ் கார்னர் திருக்காம்புலியூர் சர்ச் கார்னர் வெங்கமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு 8 மணி முதல் ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய கனமழை மழை பெய்து வருகின்றது. கத்திரி வெயில் தொடங்குவதனையொட்டி இந்த மழை என்கின்றனர். பொதுமக்கள், மேலும், இந்த மழையால் மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதளவில் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.