திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (08:51 IST)

தமிழகம் முழுவதும் இன்று கிராமசபை கூட்டம்! – முதல்வர் விசிட்!

தமிழகம் முழுவதும் இன்று கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கிராம சபை கூட்டத்தில் கலந்துக் கொள்கிறார்.

இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு அனைத்து கிராமங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்த உள்ளாட்சித்துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி தமிழகத்திலும் சிறப்பு கிராமசபை கூட்டங்கள் இன்று நடத்தப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். வளர்ச்சி திட்டங்கள் குறித்த தீர்மானங்கள் கிராம சபை கூட்டங்களில் நிறைவேற்றப்பட உள்ளன.