1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Rain Alert for Chennai and Three Other Districts

சென்னையில் இன்றும் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

Tags: சென்னை
சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
நேற்று சென்னையில் திடீரென பெய்த மழையால் பல பகுதிகளில் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. இந்த நிலையில், இன்றும் காலை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
 
காற்றின் வேக மாறுபாடு காரணமாக இந்த நான்கு மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என்பதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
 
மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
நேபாளத்தில் இடைக்கால அரசு.. முன்னாள் சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதி பொறுப்பேற்பு..!