தொடர்புடைய செய்திகள்
- காஞ்சிபுரம் டிஎஸ்பியை கைது செய்த உத்தரவு: காவல்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு..!
- அப்பா ஸ்டாலின் அவர்களே… புகாரளித்து 10 நாட்கள் ஆகியும் நடவடிக்கை இல்லை… ஜாய் கிரிசில்டா ஆதங்கம்!
- 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.. குடையுடன் வெளியே செல்லுங்க..!
- ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றமா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
- காலையில் குறைந்து மாலையில் எகிறிய தங்கம் விலை! புதிய உச்சம் தொட்ட தங்கம்!
வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. 25 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, சென்னை உட்பட தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழைப்பொழிவு இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள்: செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர், சேலம், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருப்பூர், விருதுநகர், கோவை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 25 மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திடீர் மழைப்பொழிவு, கடும் வெப்பத்தால் வாடும் மக்களுக்கு சற்று ஆறுதலை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran
